மலேசிய தேர்தலில் 89 வயது பாட்டி போட்டி!
கோலாலம்பூர்: மலேசிய தேர்தலில் 89 வயதான போட்டி போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவர்தான் வேட்பாளர்களிலேயே மிகவும் வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் மார்ச் 8ம் தேதி நாடாளுமன்றத்திற்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் குவாலா டெரங்கனு எம்.பி தொகுதியில் போட்டியிட 89 வயதாகும் மைமூன் யூசுப் என்ற பாட்டி மனு தாக்கல் செய்துள்ளார். தனது தோழிகளான சினா (67), செமா (53) ஆகியோருடன் வந்து மனு தாக்கல் செய்துள்ளார் மைமூன் யூசுப்.
வேட்பு மனு தாக்கலுக்குப் பின்னர் மைமூன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்து அசத்தினார். தற்போதைய அரசின் தவறான செயல்களை நான் எம்.பி. ஆனால் சரி செய்வேன். அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பேன் என்றார் மைமூன்.
மேலும், வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ரூ. 12 ஆயிரம் தேவைப்பட்டது. மேலும் பிரசார காப்புத் தொகையாக ரூ. 6000 தேவைப்பட்டது. அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. அந்தத் தொகையை நான் சேகரித்து விட்டேன்.
என்னால் நன்கு பேச முடியும். நடந்து சென்று ஓட்டு கேட்க முடியும். எனவே தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன் என்றார் மைமூன்.
மைமூன், கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் போட்டியிட நான்கு முறை மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவரது வேட்பு மனுக்கள் முறையாக இல்லாத காரணத்தால் அவை நிராகரிக்கப்பட்டு விட்டன. ஆனால் இந்த முறை அவர் வெற்றிகரமாக வேட்பாளராகி விட்டார்.
மலேசியத் தேர்தலில் போட்டியிடும் அதிக வயதான வேட்பாளர் என்ற பெருமையும் மைமூனுக்குக் கிடைத்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications