'ஏறக்கட்டப்பட்ட' திரிசூல் ஏவுகணை திட்டம்!

தரையிலிருந்து விண்ணி்ல் உள்ள டார்கெட்களைத் தாக்கும் ஏவுகணை தான் திரிசூல். எதிரி நாட்டு விமானங்கள், ஹெலிகாப்டர்களைத் தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டு சோதனையிடப்பட்டு வந்தது.
சுமார் 9 கி.மீ. தூரம் வரை பாயக் கூடியது. இந்த தூரத்தை 6 வினாடிகளில் கடக்கும் சக்தி கொண்டதாக திரிசூல் உருவாக்கப்பட்டது.
இந் நிலையில் ராஜ்யசபாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி அளித்த எழுத்து மூலமான பதிலில்,
திரிசூல் ஏவுகணைத் திட்டத்திற்காக இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ரூ. 282.68 கோடி செலவிடப்பட்டுள்ளது. (இது வெளியி்ல் சொல்லப்படும் கணக்கு)
ஆனால் இந்த ஏவுகணை தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்து சோதனைகளும் தோல்வியையே சந்தித்துள்ளன.
எனவே இந்தத் திட்டம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் ஒருங்கிணைந்த ஏவுகணை வளர்ச்சித் திட்டம் கைவிடப்படாது.
இந்தத் திட்டத்தின் கீழ் தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கை நோக்கி தாக்கும் அக்னி, குறுகிய தூர ஏவுகணையான பிருத்வி ஆகியவை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டுள்ளன.
அக்னி மற்றும் 250 கிலோமீட்டர் மற்றும் 350 கிலோமீட்டர் தொலைவுக்கு பாய்ந்து செல்லும் பிருத்வி ஏவுகணைகளுக்காக இதுவரை ரூ. 372.29 கோடி அளவுக்கு செலவிடப்பட்டுள்ளது.
இருப்பதிலேயே அதிக செலவு வைத்த ஏவுகணை ஆகாஷ்தான். விண்ணில் இருந்து பாய்ந்து இலக்கைத் தாக்கும் ஆகாஷ் ஏவுகணைத் திட்டத்துக்காக ரூ. 516.86 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையை உருவாக்க நீண்ட காலம் பிடித்தது. ஆனால் சோதனைகளில் நல்ல முன்னேற்றமும், நல்ல முடிவும் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் அந்தோணி.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications