கல்லூரி 'கேட்'டை மூடி மாணவர்கள் போராட்டம்
சென்னை: சாலை விபத்தில் மாணவன் படுகாயம் அடையக் காரணமானதாக கூறி கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து, கல்லூரியின் கேட்டை மூடி மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மேடவாக்கம் அருகே உள்ளது பொன்மார். இங்கு பிரின்ஸ் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் 2வது ஆண்டு பிஇ (ஐடி) படித்து வருபவர் விஜய். இவரது வீடு ஆதம்பாக்கத்தில் உள்ளது.
சமீபத்தில் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டதற்காக விஜய் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி 10 நாட்களுக்கு அவர் கல்லூரிப் பேருந்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் நகரப் பேருந்தில் கல்லூரிக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். இந்த நிலையில், நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் ராம்குமார் (28) என்பவரிடம் லிப்ட் கேட்டு அவரது மோட்டார் சைக்கிளில் பயணித்தார் விஜய்.
மேடவாக்கம் சந்திப்பு சாலையில் பைக் வந்தபோது எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்தது. இதில் ராம்குமார் தலையில் பலத்த அடிபட்டு அவர் உயிரிழந்தார்.
விஜய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால்தான் விஜய் கல்லூரிப் பேருந்தில் பயணிக்க முடியவில்லை. வேறு ஒருவரின் பைக்கில் சென்று விபத்துக்குள்ளாகி விட்டார் என்று கூறி கல்லூரி கேட்டை மூடி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர் போலீஸார் வரவழைக்கப்பட்டு மாணவர்கள் சமாதானப்படுத்தப்பட்டனர். அதன் பின்னரே மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications