'கிரியேட்டிவிட்டி'-மூளையில் 'இடஒதுக்கீடு' இல்லை!

அமெரிக்காவின் தேசிய காது கேளாமை மற்றும் பிற குறைபாடு தொடர்பான ஆய்வுக் கழகம் நடத்திய ஆய்வில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தீவிர சிந்தனை மற்றும் கற்பனைத் திறனில் ஒருவர் தீவிரமாக ஈடுபட்டிருக்கும்போது, அவரது மூளையின் பெரும்பாலான பகுதிகள் செயல்படுவதில்லை. அந்த சமயத்தில் சிறிய அளவிலான மூளைப் பகுதியே செயல்படுகிறது.
கிரியேட்டிவ் சிந்தனையின்போது மூளையின் செயல்பாடுகளைக் கணிப்பது மிகுந்த சிரமமானதாகும். பல்வேறு காரணிகள் அதில் தொடர்புடையதாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 ஜாஸ் இசைக் கலைஞர்களை வைத்து இது தொடர்பான சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஆறு பேரும் இரண்டு விதமான சூழ்நிலையில் கீபோர்ட் வாசிக்கும்போது, அவர்களது மூளையின் செயல்பாடு எப்.எம்.ஆர்.ஐ ஸ்கேனிங் மூலம் கண்காணிக்கப்பட்டது.
எப்.எம்.ஆர்.ஐ என்பது, மூளையின் பல்வேறு பகுதிகளுக்கும் ரத்தம் எந்த அளவுக்குப் பாய்கிறது என்பதை கணிப்பதாகும்.
இந்த ஆய்வின்போது சாதாரண ஒரு ட்யூனை இசைக் கலைஞர்கள் வாசித்ததற்கும், புதிதாக ஒரு ட்யூனை உருவாக்கி வாசித்ததற்கும், மூளையில் நிறைய வேறுபாடு ஏற்படுவதை கணிக்க முடிந்தது.
இந்த வேறுபாடு, மூளையின் முன்பகுதியில் உள்ள, சிந்தனையைத் தூண்டும் கார்டெக்ஸ் பகுதியில், ஏற்பட்டது.
அதேசமயம், 'டார்சாலேட்டரல் பிரிபிரன்டல் கார்டெக்ஸ்' எனப்படும், மூளையின் பிரதான பெரும் பகுதி சுத்தமாக எந்த செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை என்பதும் தெரிய வந்தது. ஆனால் மூளையின் சிறிய பகுதியான 'மீடியல் பிரி பிரன்டல் கார்டெக்ஸ்' பகுதி அதீத செயல்பாட்டுடன் இருந்ததும் தெரிய வந்தது.
இந்த சிறிய பகுதிதான் சுய சிந்தனைகளுக்கும், நமது நடத்தைகளுக்கும் முக்கிய காரணமாகும். ஒரு நிகழ்ச்சி குறித்து விவரித்தபோதும், அதன் பின்னர் அந்த நபர் சிந்திக்கத் தொடங்கியபோதும், இந்தப் பகுதிதான் அதிக அளவில் செயல்பட்டது.
செயல்பாடுகளைக் கண்காணிக்கும் மூளையின் பெரும்பாலான பகுதிகள், செயல்படாமல் இருக்கும்போது கூட, அந்த நபரால் பல புதிய சிந்தனகளை உருவாக்கவும், அதை செயல்படுத்தவும் முடிந்தது.
எனவே மூளையின் குறிப்பிட்ட பகுதிதான் கிரியேட்டிவிட்டுக்குக் காரணம் என்று கூற முடியாது. ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடுதான் கிரியேட்டிவிட்டிக்கு வழி வகுப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications