கொழும்பில் தற்கொலைப் படை தாக்குதல்-7 பேர் காயம்
கொழும்பு: கொழும்பில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், கொழும்பு மோதரா பகுதியில் உள்ள ஒரு 3 மாடி லாட்ஜில் சிலர் சந்தேகத்திற்கு இடமான வகையில் தங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து இன்று காலை 6.05 மணியளவில் போலீஸார் அங்கு விரைந்தனர்.
குறிப்பிட்ட அறையில் புகுந்து சோதனை போட போலீஸார் முயன்றனர். அப்போது அங்கிருந்த ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.
இந்த சம்பவத்தில் அவர் உடல் சிதறி பலியானார். தாக்குதலில் ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸாரும், 2 பெண்கள் உள்பட நான்கு தமிழர்களும் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த வீட்டிலிருந்து 9எம்எம் துப்பாக்கியும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார் அவர்.
கொழும்பு நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு வீட்டில் தற்கொலைப் படை விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தெரிய வந்துள்ளதால் நகரில் பரபரப்பு அதிகரித்துள்ளது. நகர் முழுவதும் உஷார்நிலையில் பாதுகாப்புப் படையினர் வைக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications