புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் தமுமுக
தஞ்சாவூர்: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தனது பெயரை மாற்றிக் கொண்டு புதிய அவதாரம் எடுக்கிறது. தேர்தலிலும் போட்டியிட தீர்மானித்துள்ளது.
தமுமுக எனப்படும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் நடைபெற்றது.
தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாநில துணைச் செயலாளர்கள், மாநில அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தமுமுகவை பெயர் மாற்றத்துடன் அரசியல் கட்சியாக மாற்றுவதா அல்லது தமுமுகவின் வழிகாட்டலில் புதிய அரசியல் கட்சியை உருவாக்குவதா என ஆலோசனை நடந்தது.
இறுதியில் புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய அரசியல் கட்சி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோர் இணைந்து பணியாற்றும் வகையில் முழுமையான ஜனநாயக கட்சியாக செயல்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடுதலாக ஆய்வு செய்யவும், தமுமுகவுக்கும், புதிய அரசியல் கட்சிக்குமான உறவை திட்டமிடுவதற்கும், அமைப்பு நிர்ணய சட்டத்தை உருவாக்குவதற்கும் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் அரசியல் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் மாநிலச் செயலாளர்கள் அப்துஸ் ஸமது, மௌலானா நாசர், மாநிலத் துணைச் செயலாளர் ஹாஜா கனி. மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் அவுலியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஐவர் குழு மார்ச் 31ம் தேதிக்குள் தனது அறிக்கைகளை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கைகள் குறித்து தலைமை நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்கும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications