சிபிஎஸ்இ தேர்வுகள் தொடக்கம்-சென்னையில் 72 மையங்கள்
டெல்லி: 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பாடத் திட்ட பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின. சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
மத்திய செகண்டரி கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் தொடங்கின. நாடு முழுவதும் மொத்தம் 13.13 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர்.
மொத்தம் 5018 தேர்வு மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 375 மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் மட்டும் 1109 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கண் பார்வையற்றவர்கள், மாற்றுத் திறன் உடையவர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகிய சிறப்புப் பிரிவின் கீழ், 10ம் வகுப்பில் 2478 பேரும், 12ம் வகுப்பில் 2132 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
சென்னையில், இந்த ஆண்டு 5000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 72 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு முதல் புதிய முறையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்த கேள்விகளில் 20 சதவீத கேள்விகள், சிந்தித்து எழுதும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது மக்கப் செய்து வந்து தேர்வு எழுத முடியாத அளவுக்கு இவை சிந்தித்து எழுதும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கேள்விகளில் 10 சதவீதம், குறுகிய விடைகளை அளிக்கும் வகையிலான கேள்விகளாக இருக்கும்.
10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27ம் தேதி முடிகிறது, ஏப்ரல் 2ம் தேதி 12ம் தேதி தேர்வுகள் முடிகின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்சில்..
அதே போல துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் உள்ள சுமார் 110 இந்தியப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் இந்தத் தேர்வை இன்று முதல் எழுதுகின்றனர்.
யுஏஇயில் மட்டும் 52 பள்ளிகள் உள்ளனர். இங்கு 2,200 மாணவ, மாணவிகள் பயில்வது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications