ஐ.டி. துறை மீது அப்படியென்ன கோபம் 'மி்ஸ்டர் சிதம்பரம்'?

(இயக்குநர், S3 Solutions)
மத்திய பட்ஜெட்டில் விவசாயம் உள்ளிட்ட பல துறைகளுக்கு பரிவு காட்டியிருக்கும் நிதியமைச்சர் ப.சிதம்பரம், சாப்ட்வேர் துறை மீது மட்டும் 'ஹார்டான' போக்கைக் காட்டியுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறைக்கு இந்த பட்ஜெட்டில் மிகப் பெரும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம், லோக்சபாவில் நேற்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்யத் தொடங்கியபோது எல்லாத் துறையினரையும் போலவே தகவல் தொழில்நுட்பத் துறையினரும் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் அவரது பேச்சை ஆர்வத்துடன் கவனித்தனர்.
எப்போதும் போல இந்த முறையும் சாப்ட்வேர் துறைக்கு நீங்கள் சலுகைகள் காட்டுவீர்கள், பரிவு காட்டுவீர்கள் என்ற எதிர்பார்ப்பு அது. ஆனால் பட்ஜெட்டை நீங்கள் தாக்கல் செய்து முடித்தபோது வெறும் ஏமாற்றமே மிஞ்சியது.
சாப்ட்வேர் துறைக்கு வரிச் சலுகை எதையும் நீங்கள் காட்டவில்லை. அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பட்ஜெட் உரையில் இடம் பெறவில்லை. சாப்ட்வேர் ஏற்றுமதியிலும், சாப்ட்வேர் தொழில்நுட்பப் பூங்காக்கள் மூலமும் அரசுக்கு பெருமளவில் வருவாய் வருகிறது.
1961ம் ஆண்டு வருமான வரிச் சட்டம் 10 பி பிரிவின் கீழ் வரி விலக்கு பெற இத்துறை தகுதி பெற்றுள்ளது. ஆனால் வரி விடுமுறை எனப்படும் 'டாக்ஸ் ஹாலிடே' குறித்து நீங்கள் அறிவிப்பீர்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நீங்கள் அதுகுறித்து எதுவும் பேசவில்லை.
நாடு முழுவதும் உள்ள 1500க்கும் மேற்பட்ட சாப்ட்வேர் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கு இது பெரும் ஏமாற்றம் தரும் செய்தியாகும். இந்த தொழில்நுட்பப் பூங்காக்கள் பலவும் இன்று சிறப்பு பொருளாதார மண்டலத்திற்குள் நுழைய முடியாமல் சிரமப்படுகின்றன.
காரணம், சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வாடகை மிக மிக அதிகம். அவ்வளவு வாடகையைக் கொடுத்து எந்த நிறுவனமும் அங்கு பிசினஸ் நடத்த முடியாது.
இரண்டாவது, பெரும்பாலான சிறப்பு பொருளாதார மண்டலங்கள், நகருக்கு வெகு தூரத்தில் அமைந்துள்ளன. அல்லது நகர எல்லையைத் தாண்டித்தான் அமைந்துள்ளன. எனவே நகருக்கு வெளியே தங்களது அலுவலகங்களை அமைப்பது சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு மிகவும் சிரமம்.
எனவே டேக்ஸ் ஹாலிடே சலுகை மூலம் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு நீங்கள் நிச்சயம் நல்லது செய்திருக்க முடியும்.
இத்தோடு நீங்கள் நிற்கவில்லை. சாப்ட்வேர் துறைக்கு சேவை வரியை விதித்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளீர்கள். புதிய சேவை வரி விதிப்புப் பிரிவின் கீழ் தகவல் தொழில்நுட்ப சாப்ட்வேர் பிரிவையும் நீங்கள் சேர்த்துள்ளீர்கள். எனவே சாப்டவேர் துறை தற்போது சேவை வரிப் பிரிவின் கீழ் வருகிறது.
தற்போது சாப்ட்வேர் சேவை, பிசினஸ் ஆக்ஸில்லரி சர்வீஸ் மற்றும் கன்சல்டிங் என்ஜீனியர்ஸ் சர்வீஸ் பிரிவின் கீழ் உள்ளது. இந்தப் பிரிவுக்கு இதுவரை வரி விலக்கு தந்து வந்த நீங்கள் திடீரென இதை வரி வரம்புக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள்.
ஆனால், உங்களது பட்ஜெட் உரையில் இதுகுறித்து ஏதுவுமே பேசாமல் படு சாமர்த்தியமாக தவிர்த்து விட்டீர்கள். ஆனால் நிதி மசோதாவிலும், பிற குறிப்புகளிலும் சாப்ட்வேர் துறை மீது சேவை வரி விதிக்கப்படுவது தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப சாப்ட்வேர் சேவை என்பது:
- சாப்ட்வேர் உருவாக்கம் (ஆய்வு, வடிவமைப்பு, திட்டம்.)
- அமல்படுத்துதல், மேம்படுத்துதல், திறனை அதிகரித்தல் மற்றும் பிற பணிகள்.
- ஐடி சாப்ட்வேர் தொடர்பான இதர பணிகள்.
- ஐடி சாப்ட்வேர் தொடர்பான ஆலோசனைகள் உள்ளிட்ட பிற உதவி சேவைகள்.
அதாவது, டேடா பேஸ் டிசைன், சாத்தியக்கூறுகள் தொடர்பான ஆய்வுகள், புதிய திட்டத் தொடக்கத்தில் தேவைப்படும் உதவிகளைச் செய்வது, டேட்டாபேஸ் பெறுவது தொடர்பான மூல உதவிகள், ஐடி சாப்ட்வேர் தொடர்பான உரிமை தொடர்பான ஆலோசனைகள் உள்ளிட்டவை.
- வணிக ரீதியிலான சாப்ட்வேர் பயன்பாட்டுக்கான உரிமம் பெறுவது, அதை உருவாக்கி, விநியோகித்து, விற்பது.
- சாப்ட்வேர் பாகங்களைப் பெற்று வேறு சாப்ட்வேர் பொருட்களில் பயன்படுத்துவது, சிடி, பிளாப்பி, கோடட் டேட்டா உள்ளிட்டவை அங்கிய சாப்ட்வேர் பொருட்கள்
- நார்மல் சாப்ட்வேர் மற்றும் விசேஷ சாப்ட்வேர் ஆகியவை.
இவை அனைத்தும் இனிமேல் வரி விதிப்புக்கு உட்படவுள்ளன.
நார்மல் சாப்ட்வேர் என்பது ஏற்கனவே உருவாக்கப்பட்ட பொதுவான சாப்ட்வேர் ஆகும். இவை விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு இருக்கும். விசேஷ சாப்ட்வேர் என்பது நமது குறிப்பிட்ட தேவைக்கு ஏற்ப உருவாக்கப்படும் சாப்ட்வேர். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இது உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.
சாப்ட்வேர் துறை மீது தாங்கள் காட்டி வரும் பாரபட்சமான போக்கு கடந்த ஆண்டே தொடங்கி விட்டது. தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கு 'மினிமம் ஆல்டர்நேட் வரி'யை நீங்கள் விதித்தபோதே அது தெளிவாக தெரிந்து விட்டது.
மேலும், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு வணிக வாடகை கட்டணத்தை நிர்ணயித்து சாப்ட்வேர் துறையினருக்கு பெரும் அடியைக் கொடுத்தீர்கள். இதன் மூலம் சிறு சாப்ட்வேர் நிறுவனங்களும் பெரும் வாடகை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்படி அனைத்து வகையிலும் பார்க்கும்போது, கடந்த ஐந்து பட்ஜெட்டுகளில், சாப்ட்வேர் துறைக்கு நீங்கள் கொடுத்துள்ள மிகப் பெரிய அடி இதுதான் என்று தெரிகிறது.
சாப்டவேர் துறையினர் மீது இன்னும் கொஞ்சம் மென்மையான போக்கை நீங்கள் கையாண்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications