காங் கூட்டணிக்கு எதிராக இ.முன்னணி தீவிர பிரச்சாரம்
சென்னை: ராமர் பாலத்தை உடைத்து தான் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவெடுத்திருக்கும் காங்ரகிரஸ், திமுக கூட்டணிக்கு எதிராக தீவிர பிரசாரம் நடத்தி வரும் தேர்தலில் படுதோல்வி அடைய செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் ராமகோபாலன் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ராமர் பாலத்தை உடைத்துதான் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் காங்கிரசும் வேறு சக்திகளும் கை கோர்த்துக் கொண்டு முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
4 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீராமநவமி' அன்று ஒரே நாளில் 35 லட்சம் ராம பக்தர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் கொடுக்கப்பட்டது.
அதை தொடர்ந்து எண்ணற்ற போராட்டங்கள் நடந்திருக்கின்றன.
2007ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி நாடு முழுவதும் இருந்து 10 லட்சம் ராம பக்தர்கள் டெல்லியில் நடந்த பேரணியில் பங்கேற்று ராமர் பாலத்தை உடைக்கக்கூடாது என்று ஒரே குரலில் தீர்மானித்தார்கள்.
காங்கிரஸ் அரசு இந்த ராமர் பாலத்தை இடிக்க துணிந்திருப்பது கோடான கோடி ராமர் பக்தர்களுக்கு சவால் விடுவதாகும்.
ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதா அல்லது தானாக உருவானதா என்பதற்கு விஞ்ஞான ஆதாரம் எதுவும் இல்லை. ராமர் பாலத்தை உடைப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய பிரமாண பத்திரத்தில் அரசு கூறியுள்ளதாகத் தெரிகிறது.
ராமர் பாலத்தை உடைத்து தான் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இவர்கள் எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக தீவிர பிரசாரம் நடத்தி வர இருக்கும் தேர்தலில் இவர்களை படுதோல்வி அடைய செய்ய வேண்டும். இவர்களை வீட்டுக்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை என கூறியுள்ளார் ராமகோபாலன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications