ஈழத் தமிழர்களுக்காக அழுதால் கூட குற்றம்- ராமதாஸ்
சென்னை: ஈழத் தமிழர்களுகாக அழுதால் கூட குற்றம் என்கிறது ஊடகம் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் பேரியக்கத்தின் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது,
பணியாளர்கள் வைத்திருப்பது சங்கம், இயக்கம் என்று தான் இருக்கும். ஆனால் நீங்கள் பேரியக்கம் என்று வைத்துள்ளீர்கள்.
அரசு பணியாளர்கள், சங்கம்- இயக்கம் என்று ஆரம்பித்தாலும், அதை இரண்டாக்கத்தான் பார்ப்பார்கள். அதுபோல் இல்லாமல் அரசு செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கின்ற போராடும் சங்கமாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
உங்களுக்கு பாமக, விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவு என்றும் உண்டு. இந்த பேரியக்கம் ஜனநாயக அமைப்பாக விளங்க வேண்டும். உங்களது 31 கோரிக்கைகள் மிகவும் சாதாரணமானது தான். இதை உடனடியாக பரிசீலித்து அரசு நிறைவேற்ற வேண்டும்.
அரசு பணியாளர்கள் குறை தீர்க்க ஒரு அமைச்சர் சார்ந்த தனித்துறை வேண்டும்.
தற்போது தமிழின பகைவர்கள் கையில் ஊடகம் இருப்பதால், நமக்கு எதிராக திருப்புகிறார்கள். ஈழத்தமிழர்களுக்காக அழுதால் அதுகூட குற்றம் என்கிறது ஊடகம்.
அதற்காகத்தான் நாங்கள் நாளிதழ், தொலைக்காட்சி தொடங்கினோம். விரைவில் வார இதழ் ஒன்று தொடங்க உள்ளோம்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை மாறி, தற்போது எங்கே தமிழ் என்ற நிலையில் உள்ளது. தற்போது அளவோடு பேச நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்றார் ராமதாஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications