தனி தெலுங்கானா: 16 டிஆர்எஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா
ஹைதராபாத்: தனி தெலுங்கான மாநில கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் இன்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து கடிதங்களை ஆந்திர சட்டசபை சபாநாயகர் சுரேஷ் ரெட்டியிடம் வழங்கினர்.
நேற்று இக் கட்சியின் 4 எம்பிக்கள் பதவி விலகியது நினைவுகூறத்தக்கத்தது.
ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என்று கோரி வரும் இந்தக் கட்சிக்கு தெலுங்கானா பகுதி மக்களின் முழு ஆதரவு உள்ளது.
ஆனால், இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்து வருவதால் நேற்று இக் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட 4 எம்பிக்கள் ராஜினாமா செய்தனர்.
இன்று 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதே போல இக் கட்சியின் 13 எம்எல்சிக்களும் ராஜினாமா செய்தனர்.
தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக்கு இன்னொரு எம்பியுள்ளார். ஆனால், அவர் போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து விட்டார். அவர் நேற்று ராஜினாமா செய்யவில்லை.
அதே போல ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி சார்பில் 26 பேர் எம்.எல்.ஏக்களாக தேர்வாயினர். இவர்களில் 10 எம்.எல்.ஏக்கள் சந்திரசேகர் ராவின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் இவர்களும் ராஜினாமா செய்யவிலலை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications