'அசிங்கத் திருடனுக்கு' குண்டாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நகரில் நள்ளிரவு நேரங்களில் ஜன்னல் வழியாக கம்பியை விட்டு நகைககளைத் திருடி போலீஸில் சிக்கியுள்ள நபர், திருடப் போன இடத்தில் பிரபல நடிகை ஒருவரை ஒரு நபருடன் உல்லாச கோலத்தில் பார்த்தாக போலீஸில் கிளுகிளு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னையின் வட பகுதிகளில் அடிக்கடி வீடுகளில் நகை, பணம் திருட்டுப் போவதாக போலீஸுக்குப் புகார் வந்தது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படையினர் தீவிர வேட்டையில் இறங்கினர்.

இந் நிலையில், செம்பியம், பெரம்பூர், திரு.வி.க. நகர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் ஜன்னல் வழியாக கம்பியை விட்டு பெண்கள் கழற்றி வைத்திருக்கும், நகைகள் திருடப்படும் சம்பவம் அதிக அளவில் நடந்தது. மேலும் பெண்கள் கழற்றி வைக்கும் தாலிகளும் கூட காணாமல் போயின.

இதையடுத்து அப்பகுதிகளில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டனர். இதில் செங்குன்றத்தைச் சேர்ந்த அமீர் என்கிற குமார் சிக்கினான்.

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தைக் கேட்டு போலீஸார் அரண்டு போய் விட்டனர். காரணம், அமீர் பலே திருடன் மட்டுமல்ல, பலான திருடனாகவும் இருந்துள்ளான் என்பதுதான்.

அமீர் அளித்துள்ள அந்த பரபரப்பு வாக்குமூலத்தில்,

நள்ளிரவில் திருடப் போவேன். ஜன்னல்களை திறந்திருக்கும் வீடுகளைத் தான் குறி வைப்பேன். திருடுவதோடு ஜன்னல் வழியாக கணவன், மனைவி உல்லாசமாக இருப்பதைப் பார்த்து ரசிப்பேன்.

நடிகை...

இப்படித்தான் அசோக் நகர் பகுதியில் ஒரு வீட்டுக்குப் போனேன். அங்கு படுக்கை அறையில், ஒருவருடன் இருந்த பெண்ணைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாகி விட்டது. காரணம் அவர் ஒரு பிரபல நடிகை. இப்போது டிவி தொடர்களில் பிசியாக இருக்கிறார்.

அங்கிருந்த கைக்கடிகாரத்தை எடுக்க முயற்சித்தேன். அப்போது போலீஸ் ரோந்து வாகனம் வந்ததால் அங்கிருந்து போய் விட்டேன். பிறகு மீண்டும் ஒரு நாள் வந்தேன். அப்போது நடிகையுடன் வேறு ஒரு நபர் இருந்தார் என்று கூறியுள்ளான் அமீர்.

எந்தெந்த வீடுகளில் திருடினான் என்பதை விலாவாரியாக லிஸ்ட் எடுக்க போலீசார் முயன்று விசாரித்தபோது தான் நடிகை மேட்டரையும் கூறியிருக்கிறான்.

பலே திருடனான அமீரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார். அதன்படி அமீர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரவு நேரங்களில் ஜன்னல் ஓரத்தில் படுப்பது, ஜன்னலைத் திறந்து வைத்துப் படுப்பது, நகைகளை கழற்றி ஜன்னலோரங்களில் வைப்பது உள்ளிட்டவற்றை பெண்களும், குடும்பத்தினரும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற குறுக்குப் புத்தி கொண்ட திருடர்களிடம் சிக்கி அவமானப்பட நேரிடும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+