சிபிஐ மாநில செயலாளராக தா.பாண்டியன் மீண்டும் தேர்வு
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக தா.பாண்டியன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாடு நடந்தது. நான்கு நாட்களாக நடந்து வந்த மாநாடு நேற்றுடன் முடிவடைந்தது.
கடைசி நாள் நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலச் செயலாளராக தா.பாண்டியன் மீண்டும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டின் நிறைவாக மாபெரும் பொதுக் கூட்டம் இரவில் நடந்தது. இதில் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா, தேசிய செயலாளர் ராஜா, தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணி மாலையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு நல்லகண்ணு, தா.பாண்டியன் உள்ளிட்டோர் நடந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications