அப்பா-அம்மா சண்டையில் சிக்கி குழந்தை பலி
பட்டுக்கோட்டை: கணவனும், மனைவியும் கட்டிப் புரண்டு சண்டை போட்டு தூங்கிக் கொண்டிருந்த குழந்தை மீது விழுந்ததில், அந்தப் பச்சைக் குழந்தை பரிதாபமாக நசுங்கி இறந்தது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேல செம்பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு காமராஜ் என்கிற 2 வயது குழந்தை உள்ளது.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முருகன், சமீபத்தில் மேல செம்பாலூர் திரும்பினார். வந்தது முதலே கணவனுக்கும், மனைவிக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது.
இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது வழக்கமாகி விட்டது. 2 நாட்களுக்கு முன்பு இரவும் இவர்களுக்கு இடையே சண்டை மூண்டது. அப்போது குழந்தை காமராஜ் தூங்கிக் கொண்டிருந்தான்.
வாக்குவாதமாக இருந்த சண்டை திடீரென அடிதடியாக மாறியது. கணவனும், மனைவியும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். அப்போது நிலை தடுமாறி தூங்கிக் கொண்டிருந்த குழந்தை மீது இருவரும் விழுந்துள்ளனர்.
இதில் குழந்தை காமராஜ் சிக்கிப் படுகாயமடைந்தான். இதைப் பார்த்து அதிர்ந்த பெற்றோர் உடனடியாக காமராஜை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். அங்கு குழந்தை அனுமதிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்து போனது.
இந்த கொடுமையான சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications