மீனவர் கிறிஸ்டி உடல் அடக்கம் - ராமேஸ்வரத்தில் கனத்த அமைதி
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் கிறிஸ்டியின் உடல் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது. ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சி மடம், அக்காள் மடம் உள்ளிட்ட பகுதிகளில் பெருத்த அமைதி நிலவுகிறது. மீனவர்கள் பெரும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர்.
நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை படையினர் இரு இடங்களில் துப்பாக்கிளால் சுட்டனர். இதில் கிறிஸ்டி என்ற மீனவர் உயிரிழந்தார். பிரான்சிஸ் என்ற மீனவரின் முதுகில் குண்டு பாய்ந்து அவர் படுகாயமடைந்தார்.
அடுத்தடுத்து இலங்கை படையினர் நடத்திய வெறித் தாக்குதலால் மீனவர்கள் பெரும் சோகத்திலும், பதட்டத்திலும் மூழ்கியுள்ளனர்.
கிறிஸ்டியின் சொந்த கிராமமான தங்கச்சி மடத்தில் பெரும் சோகத்துடன் மீனவர் குடும்பங்கள் உள்ளன. பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மீனவர்கள் தங்கச்சிமடத்தில் குவிந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரமுகர்களும் கிறிஸ்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இலங்கை கடற்படையின் கொடூரச் செயலுக்கு கிறிஸ்டியின் குடும்பத்தில் இது 2வது பலியாகும். ஏற்கனவே கிறிஸ்டியின் தந்தை அந்தோணிச்சாமியும் சில ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில்தான் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்ட கிறிஸ்டியின் உடல் அடக்கம் பலத்த பாதுகாப்புக்கிடையே இன்று நடந்தது. பெரும் திரளான மீனவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கொல்லப்பட்ட கிறிஸ்டியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 1 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. என்ன காரணத்திற்காக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது என்பதை விசாரித்து அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications