மின் தடை: வட மாநிலங்கள் ஸ்தம்பி்ப்பு
Subscribe to Oneindia Tamil

நாட்டின் வடக்கு கிரிட்டில் (Northern Grid) அதிக அளவில் மின்சாரம் உறிஞ்சப்பட்டதால், அது ட்ரிப் ஆகியது. இதையடுத்து டெல்லிக்கு மின்சாரம் வினியோகிக்கும் 400 கிலோ வாட் கட்டமைப்பு இன்று அதிகாலை குலைந்தது.
இதையடுத்து டெல்லி முழுவதும் மின்சாரம் வினியோகம் முழுமையாக தடைபட்டது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது மின்சார ரயில்கள் தான்.
ரயில்கள் பாதி வழியிலேயே ஆங்காங்கே நின்றுவிட்டன. இதையடுத்து பாதியில் நிற்கும் ரயில்களை இயக்க டீசல் என்ஜின்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதே நிலை தான் உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட்டது.
இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர்.












Click it and Unblock the Notifications