மத்திய அரசு ஊழியர்களின் டி.ஏ உயர்வு
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அக விலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் முன் தேதியிட்டு இது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி உயர்வை அளிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
அதன்படி அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. இது ஜனவரி மாதம் முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். ஓய்வூதியம் பெறுவோருக்கும் இதே அளவிலான உயர்வு கிடைக்கும்.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 41 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இனிமேல் அது 47 சதவீதமாக இருக்கும்.
அகவிலைப்படி உயர்வால் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 10 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள் என்றார் முன்ஷி.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications