சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புது நீதிபதி
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியனின் மகனும், வழக்கறிஞருமான ஆர்.சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மொத்த நீதிபதி பணியிடங்கள் 49 ஆகும். தற்போது 45 பேர் பணியில் உள்ளனர். இன்னும் 4 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதிதாக ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தம் 3 வழக்கறிஞர்களின் பெயர்கள் காலியிடங்களுக்காக பரிந்துரைக்கப்பட்டது. அதிலிருந்து சுப்பையாவை மட்டும் குடியரசுத் தலைவர் நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுதொடர்பான உத்தரவு ஆவணம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் சுப்பையா கையெழுத்திட்டார். விரைவில் நியமன உத்தரவு வெளியிடப்படும். அதன் பின்னர் சுப்பையா நீதிபதியாக பதவியேற்றுக் கொள்வார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் சுப்பையா, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.ரத்தினவேல் பாண்டியனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
--
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications