'ஹோமா': வாலிபரைக் கொன்ற போலீஸ்காரர் சரண்!
நெல்லை: வாலிபருடன் ஓரினச் சேர்க்கை வைத்துக் கொண்டு, அவரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த போலீஸ்காரர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நெல்லை மாவட்டம் மனூர் அருகேயுள்ள திருமலாபுரத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி என்ற ரவிக்குமார். மேலப்பாளையம் அருகே பாதாள சாக்கடை பம்பிங் ஸ்டேஷனில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார்.
குறிச்சியைச் சேர்ந்தவர் மார்த்தாண்டம். நெல்லை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு குறிச்சி பைபாஸ் அருகேயுள்ள ஒரு கடையில் வெள்ளைசாமி டிபன் வாங்குவதற்காக சென்றார். அப்போது அங்கு பைக்கில் வந்த மார்த்தாண்டம் வெள்ளைசாமியை அழைத்து கொண்டு பைபாஸ் ரோட்டிலுள்ள பாலையங்கால்வாய்க்கு சென்றார். பின்னர் வெள்ளைசாமி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மார்த்தாண்டத்தை தேடினர். துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் மார்த்தாண்டம் சஸ்பெண்ட் செய்யபபட்டார்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அவர் 2 முறை முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவை நிராகரிக்கப்பட்டதையடுத்து மார்த்தாண்டம் நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications