திருவாரூர்: வேன்-லாரி மோதலில் 7 பேர் பலி
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 7 பேர் பலியாயினர். மேலும் 23 பேர் காயமடைந்தனர்.
திருவாரூர் அலங்காடு கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு வேனில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.
உப்பூர் கிராஸ் அருகே வேன் வந்தபோது எதிரே சிமெண்ட் மூடைகள் ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் 5 பெண்கள், ஒரு சிறுமி, வேன் டிரைவர் செந்தில் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
காயமடைந்த மேலும் 23 பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேமுதிக தொண்டர் விபத்தில் பலி:
இதற்கிடையே கயத்தாறு அருகே இன்று காலை நடந்த சாலை விபததில் தேமுதிக தொண்டர் பலியானார்.
தேமுதிக மகளிர் அணி மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திசையன்விளை பகுதியை சேர்ந்த அக்கட்சியினர் 17 பேர் ஒரு வேனில் சென்றனர். மாநாடு முடிந்ததும் நள்ளிரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கயத்தாறு அடுத்த ராஜபுதுக்குடி அருகே வந்துகொண்டிருந்தபோது, நிலை தடுமாறிய வேன் சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இதில் வேனில் இருந்த ஒருவர் இறந்தார்.
16 பேர் காயமடைந்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications