'டாக்டைம்' முற்றிலும் இலவசம்!: இது கலாம் பாலிசி
டெல்லி: முன்னணி அரசியல் தலைவர்களுக்கு முன்னோடியாக விளங்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தான் கலந்துகொள்ளும் விழாக்களில் கட்டணம் எதுவும் வாங்காமல் இலவசமாக சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார்.
77 வயதை கடந்த அப்துல்கலாம் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய கடந்த 8 மாதங்களுக்குள் உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொண்டு இதுவரை 160க்கும் மேற்பட்ட சொற்பொழிவை ஆற்றியுள்ளார்.
இதுபற்றி கலாமின் செயலாளர் ஹெச்.ஷெரிடன் கூறுகையில், அவரது பதவிக் காலத்தில் இருந்ததைவிட இப்போது அதிக பிஸியாக உள்ளார். தங்களது விழாவுக்கு தலைமை தாங்குமாறு பல்வேறு தரப்பில் இருந்தும் ஒரு நாளைக்கு குறைந்தது 10 முதல் 15 அழைப்பிதழ்களாவது கலாமுக்கு வருகின்றன.
அவற்றை ஏற்றுக் கொண்டு விழாக்களுக்குச் செல்கிறார். இருந்தாலும் அழைப்பிதழ்கள் ஓய்ந்தபாடில்லை. வாரத்துக்கு 3 விழாக்களிலாவது கலந்து கொள்கிறார்.
எங்கு சென்று பேசினாலும் அதற்கு கலாம் கட்டணம் வசூலிப்பதில்லை. பதவி விலகிய பிறகு 7 முறை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். இங்கிலாந்து, இஸ்ரேல், நெதர்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் கலாம் ஆற்றிய உரைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அமெரிக்காவில் சர்வதேச விண்வெளி மாநாட்டிலும், தொழில்முனைவோர் மத்தியில் பிட்ஸ்பர்க்கிலும் உலகமயமாக்கல் பற்றி அவர் பேசச் சென்றபோதும் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டார். இந்த சொற்பொழிவுக்கும் அவர் கட்டணம் பெறவில்லை என்றார்.
கலாம் தனது பதவிக்காலத்தில் ஒருமுறைகூட அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'கலாம் வழி, தனி வழி' என்றாலும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் எல்லாம் அப்படியல்ல!..
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி பில் கிளின்டன், தனது பதவிக் காலத்துக்குப் பிறகு வங்கிகள், மக்கள் தொடர்பு நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள், இஸ்ரேலிய மற்றும் யூத குழுமங்களின் அழைப்பையேற்று 59 தடவை உரையாற்றியுள்ளார். இதற்காக அவர் பெற்ற சன்மானம் எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட ரூ. 38 கோடி!
இப்போதைய ஜனாதிபதி புஷ்ஷின் தந்தை சீனியர் புஷ் பதவி விலகியபிறகு அவரது ஒரு பேச்சுக்கு 'குளோபல் கிராசிங்' என்ற தொலைதொடர்பு நிறுவனம் 80மில்லியன் டாலர்கள் மதிப்பிலான 'பங்கு'களை கொடுத்ததாம். (பிறகு அந்த நிறுவனம் திவாலானது வேறு கதை)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications