விஜய்காந்த் ஆதரவை கோருமா காங்கிரஸ்?
டெல்லி: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், கட்சி கொறடா பீ்ட்டர் அல்போன்ஸ் ஆகியோர் டெல்லியில் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் 2 எம்பி சீட்களை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இந்தத் தேர்தல் தொடர்பாகவும் வேட்பாளர்கள் தொடர்பாகவும் பீட்டர் மற்றும் சுதர்சனத்துடன் சோனியா ஆலோசனை நடத்தினார்.
இந் நிலையில் தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 19ம் தேதி கூடுகிறது. இது தொடர்பாகவும் சோனியாவுடன் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
கடந்த கூட்டத் தொடரில் புலிகளை ஆதரிக்கும் விஷயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை கோரி காங்கிரஸ் வெளிநடப்பு செய்து திமுகவுக்கு அதிர்ச்சி தந்தது. இதையடுத்து திமுக-காங்கிரஸ் இடையிலான உறவில் பின்னடைவு ஏற்பட்டது.
அது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்துவிடாமல் தவிர்க்குமாறு சுதர்சனம் மற்றும் பீட்டரிடம் சோனியா கூறி அனுப்பியதாகத் தெரிகிறது.
நாளை வேட்பாளர்கள் அறிவிப்பு:
இந் நிலையில் இன்று சென்னையில் சட்டசபை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சுதர்சனம்,
தமிழக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்களை சோனியா காந்தி நாளை அறிவிப்பார். வேட்பாளர்கள் சனிக்கிழமை மனு தாக்கல் செய்வார்கள்.
எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. எனவே ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் 5 பேரும் வெற்றி பெறுவது உறுதி என்றார்.
விஜயகாந்த்திடம் ஆதரவு கேட்பீர்களா என்று சுதர்சனத்திடம் கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸை ஆதரிக்க விஜய்காந்த் தாயராக உள்ளதாக சோனியாவுக்கு சில காங்கிரஸ் தலைவர்கள் தகவல் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications