ஹோட்டல் அதிபர் காமத்துக்கு சாதனையாளர் விருது
மும்பை: புகழ் பெற்ற காமத் ஹோட்டல் குழுமத்தின் செயல் தலைவரும், நிர்வாக இயக்குநருமான வித்தல் வெங்கடேஷ் காமத்துக்கு (வி.வி.காமத்) பட்வா எனப்படும் சர்வதேச பசிபிக் பிராந்திய சுற்றுலா எழுத்தாளர்கள் சங்கத்தின் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பெர்லினில் நடந்த சர்வதேச மாநாட்டில் இந்த விருது காமத்துக்கு வழங்கப்பட்டது. சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறையில் சிறந்து விளங்குவோருக்கும், முக்கியப் பங்காற்றுபவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் முக்கிய ஹோட்டல் குழுமங்களில் ஒன்றாக காமத் விளங்குகிறது. மிகப் பெரிய வர்த்தக அமைப்பாகவும் அது மாறியுள்ளது. சொகுசு ஹோட்டல்கள், பட்ஜெட் ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்டுகள், கேட்டரிங், சுற்றுலா, கல்வி நிலையங்கள் என மிகப் பெரிய அமைப்பாக காமத் ஹோட்டல் குழுமம் விளங்குகிறது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹோட்டல் துறையில் சிறந்து விளங்குபவர் காமத் என பாராட்டுப் பட்டயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வி.வி.காமத்துக்கு இந்த விருது புதிதல்ல. இதுவரை பல்வேறு அமைப்புகள் வழங்கியுள்ள 50க்கும் மேற்பட்ட விருதுகளை அவர் பெற்றுள்ளார். பன்முக மனிதராகவும் காமத் விளங்குகிறார். மராத்தியில் பல்வேறு நூல்களை அவர் எழுதியுள்ளார். சுற்றுச்சூழலிலும் ஆர்வம் அதிகம் கொண்டவர்.
கடந்த ஆண்டு பட்வா அமைப்பு, காமத் ஹோட்டல் குழுமத்திற்கு, இந்தியாவின் சிறந்த ஹோட்டல் குழுமம் என்ற விருதினைக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications