ஜின்னா, வசந்தி மனு தாக்கல்-வசந்தி மீது வங்கி மோசடி புகார்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அமீர் அலி ஜின்னா மற்றும் வசந்தி ஸ்டான்லி ஆகிய இருவரும் இன்று மனு தாக்கல் செய்தனர்.
ராஜ்யசபா தேர்தலில் திமுக இரு இடங்களில் போட்டியிடுகிறது. அமீர் அலி ஜின்னா மற்றும் வசந்தி ஸ்டான்லி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று இருவரும் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். சட்டசபை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சட்டசபை செயலரும், தேர்தல் அதிகாரியுமான செல்வராஜிடம் இருவரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
முதலில் ஜின்னா வேட்பு மனுவை வழங்கினார். பின்னர் வசந்தி ஸ்டான்லி வழங்கினார்.
அவர்களுடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், ஸ்டாலின், சுப தங்கவேலன், பன்னீர்செல்வம், பூங்கோதை, கீதா ஜீவன், சுவாமிநாதன், சாமி உடன் வந்தனர்.
வசந்தி மீது வங்கி மோசடி புகார்:
இதற்கிடையே வசந்தி ஸ்டான்லி மீது வங்கி மோசடி புகார்கள் எழுந்துள்ளன.
வணிக வரித்துறையில் பணியாற்றிய வசந்தியும் அவரது கணவர் ஸ்டான்லியும் போலி சொத்து ஆவணங்களை சமர்பித்து வங்கியில் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றியதாக, புகைப்படங்களுடன் சிண்டிகேட் வங்கி நிர்வாகம் வெளியிட்டிருந்த எச்சரிக்கை அறிவிப்பு விளம்பரத்தால் தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வசந்தியும், அவரது கணவர் ஸ்டான்லியும் சிண்டிகேட் வங்கியின் கோயம்பேடு கிளையில் ரூ. 25 லட்சமும், வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் ரூ. 12 லட்சமும் கடன் பெற்றுள்ளனர். இதில், வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் ஸ்டான்லி வாங்கிய கடனுக்கு, ஜாமீன்தாரராக வசந்தி கையெழுத்திட்டுள்ளார்.
முதலில் வாங்கிய கடனுக்கு நிலுவைத் தொகையாக 32 லட்சத்து 11 ஆயிரத்து 340 ரூபாயும், இரண்டாவது கடனுக்கு நிலுவைத் தொகையாக 12 லட்சத்து 24 ஆயிரத்து 279 ரூபாயும் செலுத்த வேண்டியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, வங்கி நிர்வாகம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி பொது மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிட்டுள்ளது. அதில், வசந்தி மற்றும் ஸ்டான்லி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இவர்கள், தவணை தொகையை வங்கிக்கு முறையாக செலுத்தாததோடு, போலி சொத்து ஆவணங்களை கொடுத்து கடன் பெற்று ஏமாற்றியதாக வங்கி நிர்வாகம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
வங்கி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், போலி சொத்து ஆவணங்களை காட்டி கடன் பெற்று, வங்கியை ஏமாற்றியுள்ளதால் கடன் நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக, கடன்தாரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயாராகி வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தான், இப்போது வசந்திக்கு எதிராக திரும்பியுள்ளது.
எம்.பி. சீட் வாய்ப்பை எதிர்பார்த்து ஏமாந்த தரப்பினர் இதுதான் வாய்ப்பு என்று வசந்திக்கு எதிராக பல்வேறு புகார்களை சேகரித்துக் கட்சித் தலைமைக்கு அனுப்பி வருகின்றனர்.
இதில் பலவற்றில் உண்மையில்லை என்றாலும் வசந்தி ஸ்டான்லிக்கு எதிரான இந்த வங்கி மோசடி விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வசந்தியை மாற்றிவிட்டு வேறு வேட்பாளரை திமுக நிறுத்தலாம் என்று கூறப்பட்டது. ஆனாலும், வசந்தியே இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட்












Click it and Unblock the Notifications