அமெரிக்காவுக்கு ஆள் கடத்தல்-200 நடிகர், நடிகைகளுக்கு தடை
சென்னை: நடிகை புளோராவைப் போல விசா மோசடியில் ஈடுபட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த 200 நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் நிரந்தரமாக அமெரிக்கா செல்ல அந்த நாட்டுத் தூதரகம் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பணம் பெற்றுக் கொண்டு பெண் ஒருவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக நடிகை புளோரா நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இதேபோல ஏகப்பட்ட நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அமெரிக்காவுக்கு அனுப்பிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த இப்படிப்பட்ட 200 பேர் நிரந்தரமாக அமெரிக்கா செல்ல அந்த நாட்டு அரசு அதிரடித் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க துணைத் தூதர் டேவிட் ஹாப்பர் கூறுகையில், இந்தியத் திரையுலகுக்கு வெளிநாடுகளில் நல்ல பெயர் உள்ளது. அமெரிக்காவிலும் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் சிலர் இதை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்களுக்கு உள்ள புகழினைப் பயன்படுத்திக் கொண்டு, சட்டவிரோத செயல்களுக்கு தணை போயிருக்கிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.
இப்படி பணம் பெற்றுக் கொண்டு மோசடியாக ஆட்களை அமெரிக்காவுக்குக் கடத்திய 200 திரையுலகினரை அடையாளம் கண்டுள்ள அமெரிக்க தூதரகம் அவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல நிரந்தரமாக தடை விதித்துள்ளது.
மேலும் அவர்களால் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களும் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது அமெரிக்க நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்ட 200 பேரில் நடிகர், நடிகைகள்தான் அதிகமாம். அவர்களது பெயர் விவரங்களை வெளியிட அமெரிக்க தூதரகம் மறுத்து விட்டது. அது ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களால் இனிமேல் அமெரிக்காவுக்கு போகவே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் ரூ. 5 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு, உதவியாளர், மேக்கப் மேன், மேக்கப் பெண் என்று பல்வேறு விதமான பொய்யான பெயர்களில் ஆட்களை அமெரிக்காவுக்குக் கடத்தியுள்ளனர்.
திரையுலகினரின் இந்த விசா மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications