ராஜ்யசபா தேர்தலில் வைகோ போட்டி

Subscribe to Oneindia Tamil

Vaiko
சென்னை: தமிழக ராஜ்யசபா எம்பி தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

அதிமுக கூட்டணி வசம் 66 எம்எல்ஏக்கள் உள்ளனர். (அதிமுக-60, மதிமுக-6). ஒரு எம்பியைத் தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்களி்ன் ஆதரவு தேவை. இதனால் இந்தக் கூட்டணியால் ஒரு இடத்தில் நிச்சயமாக வெல்ல முடியும். அந்த இடத்தில் அதிமுக சார்பில் பாலகங்கா நிறுத்தப்பட்டுள்ளார்.

இன்னொரு இடத்தை வெல்ல மேலும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இந் நிலையில் அந்த இடத்தில் வைகோ போட்டிடக் கூடும் என மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாலகங்காவுக்குப் போக அதிமுகவிடம் மிச்சமுள்ள 26 வாக்குகளுடன் மதிமுகவின் 6 எம்எல்ஏக்களையும் சேர்த்தால் 32 பேரின் ஆதரவு வைகோவுக்கு கிடைத்துவிடும்.

ஆனாலும் வெற்றி பெற வைகோவுக்கு மேலும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

அதிமுக, திமுக கூட்டணியை தவிர்த்துவி்ட்டுப் பார்த்தால் சட்டசபையில் தேமுதிக தலைவர் விஜய்காந்திடம் ஒரு ஓட்டும், தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டி வேட்பாளராக நின்று வென்ற இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏவின் ஓட்டும் உள்ளது.

இந்த இருவரின் ஓட்டுக்களும் கிடைத்தால் வைகோவால் வெல்ல முடியும்.

ஆனால், போட்டி வேட்பாளராக வென்ற பின் சட்டசபையில் இடதுசாரிகளுடன் இணைந்தே செயலாற்றி வருகிறார் தளி எம்எல்ஏ. இதனால் இவரது வாக்கு மார்க்சிஸ்ட் சார்பில் நிறுத்தப்படும் டி.கே.ரெங்கராஜனுக்கே கிடைக்க வாய்ப்புள்ளது.

அதே போல விஜய்காந்தின் வாக்கு காங்கிரஸ் வேட்பாளருக்கே கிடைக்கும் என்று தெரிகிறது.

இதனால் வைகோவால் அவ்வளவு எளிதில் வெல்ல முடியுமா என்பது சந்தேகமே.

அதே போல திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் 5வது வேட்பாளர் (ரெங்கராஜன்) வெல்லவும் இன்னும் இரு வாக்குகள் வேண்டும். இதனால் முதல் சுற்றி்ல் அவர் வெல்வதும் அவ்வளவு எளிதல்ல.

ஆனால், இரண்டாவது சுற்றில் அதிகபட்ச வாக்குகள் பெற்ற வாக்காளர் என்ற அளவில் அவரால் வெல்ல முடியும்.

இந்த வகையிலும் வைகோ வெல்ல வாய்ப்பு குறைவு தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+