யு.எஸ். விசா மோசடி: குஜராத் பெண் சிக்கினார்
சென்னை: போலி ஆவணங்களைக் கொடுத்து அமெரிக்க விசா பெற முயன்ற குஜராத்தைச் சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
போலியான ஆவணங்களைக் காட்டி அமெரிக்க விசா பெற முயன்றதாக நடிகை புளோரா உள்ளிட்ட 3 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற முறைகேட்டில் தென்னிந்தியத் திரையுலகினர் ஈடுபட்டுள்ளதாகவும், திரையுலகைச் சேர்ந்த 200 பேர் நிரந்தரமாக அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இன்னொரு பெண் விசா மோசடியில் சிக்கியுள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ஜெயஸ்ரீபடேல் (28). இவருக்கு அமெரிக்காவில் வீட்டு வேலைக்காரப் பெண்ணாக பணியாற்றும் வாய்ப்பு வந்தது. இதற்காக விசா எடுக்க ஒரு புரோக்கரை அணுகியுள்ளார். அவரிடம் விசா பெற்றுத் தருவதற்காக ரூ. 50 ஆயிரம் பணமும் கொடுத்துள்ளார். அந்த புரோக்கர் சில ஆவணங்களை ஜெயஸ்ரீயிடம் கொடுத்துள்ளார்.
இந்த ஆவணங்களை ஜெயஸ்ரீ துணைத் தூதரகத்தில் தாக்கல் செய்தார். இவற்றைப் பரிசோதித்தபோது போலியான ஆவணங்கள் எனத் தெரிய வந்தது. மேலும் ஜெயஸ்ரீ தாக்கல் செய்த பாஸ்போர்ட்டும் போலியானது எனத் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீஸாரிடம் துணைத் தூதரக அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீஸார், ஜெயஸ்ரீ படேலைக் கைது செய்தனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications