தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுறுவல் இல்லை-டிஜிபி
சென்னை: தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் நடமாட்டமும், செயல்பாடுகளும் தமிழகத்தில் அறவே இல்லை என்று டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார்.
சைபர் குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக நாஸ்காம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட டிஜிபி ராஜேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுறுவல் இல்லை. கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு காரணமாகவே கேரளாவில் விடுதலைப் புலிகளுக்காக கட்டப்பட்டு வந்த படகு பிடிபட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் கண்டிப்பாக இல்லை.
விசா மோசடி:
விசா மோசடி வழக்கமாக நடப்பதுதான். அமெரிக்கா என்றில்லை, இங்கிலாந்து, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளுக்கும் செல்வோரில் சிலர் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுகின்றனர். நாம் அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது.
மோசடி செய்பவர்கள் அதைச் செய்யத்தான் செய்வார்கள். ஆனால் சட்டம் தனது வேலையை சரியாக செய்யும். மோசடி செய்து சிக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராஜேந்திரன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications