ஏகாம்பரநாதர் கோவிலுக்கு ரூ. 40 லட்சத்தில் வெள்ளி விமானம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள புகழ் பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் ரூ. 40 லட்சத்தில் வெள்ளி விமானம் கட்டப்பட்டு வருகிறது.
வன்னியகுல சத்திரிய சங்கம் சார்பில் இந்த வெள்ளி விமானம் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஐந்து டன் தேக்குமரம் புதுச்சேரியிலிருந்து இலவசமாக வரவழைக்கப்பட்டுள்ளது.
தற்போது விமானம் கட்டும் பணி விரைவாக நடந்து வருகிறது. 150 கிலோ வெள்ளி இதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானத்தில், சிம்மம், நந்தி, யானை ஆகியவை செதுக்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications