நில ஆக்கிரமிப்பு: விஜயகாந்த்துக்கு இறுதி நோட்டீஸ்!
மதுராந்தகம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எந்த நேரத்திலும் அது கையகப்படுத்தப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு மதுராந்தகம் தாசில்தார் இறுதி நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
மதுராந்தகம் அருகே உள்ள தேவாத்தூர் உள்ளிட்ட சில கிராமங்களில் விஜயகாந்த்துக்குச் சொந்தமான 402 ஏக்கர் பரப்பளவிலான கேப்டன் பண்ணை என்ற பண்ணை நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் 26 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு நிலம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் ஆய்வு நடத்தினர். இதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது உண்மையே என தெரிய வந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தாசில்தார் நடராஜன் விஜயகாந்த்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். கேப்டன் பண்ணை நுழைவாயில் கேட்டிலும் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
நேற்றுடன் 15 நாள் அவகாசம் முடிவடைந்தது. இந்த நிலையில் விஜயகாந்த் சார்பில் இன்று ஒரு வழக்கறிஞர் தாசில்தார் நடராஜனை சந்தித்து கூடுதல் அவகாசம் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த தாசில்தார் நடராஜன், இறுதி நோட்டீஸ் ஒன்றை வழக்கறிஞரிடம் கொடுத்தார். அதில், கூடுதல் கால அவகாசம் தர முடியாது. உடனடியாக இடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் எந்த நேரத்திலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் கையகப்படுத்தப்படும். அதற்காகும் செலவு விஜயகாந்த்திடம் இருந்து வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நோட்டீஸை கேப்டன் பண்ணை நுழைவாயில் கேட்டிலும் அதிகாரிகள் ஒட்டி வைத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications