மதுரவாயல்,கோயம்பேடு-துறைமுகத்துக்கு 2 பறக்கும் சாலைகள்

இதற்கு ரூ. 1,468 கோடி செலவாகும்.
இது தொடர்பாக தமிழக நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பறக்கும் சாலை' (எலிவேட்டட் ஹைவே) திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இத் திட்டத்தின் அடிப்படையில் சென்னை துறைமுகத்துக்கு சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்களுக்கு தனியே பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு நேரடியாக பறக்கும் சாலை அமைக்கப்படும்.
ரூ.1,468 கோடி மதிப்பிலான இத் திட்டத்தை தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் ஆகியவை இணைந்து செயல்படுத்த முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், மதுரவாயலில் இருந்து கோயம்பேடு வரை தற்போதுள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையின் மத்திய பகுதியில் தூண்கள் அமைத்து அதன்மீது பறக்கும் சாலை அமைக்கப்படும்.
இதைத் தொடர்ந்து, கோயம்பேடு பகுதியில் இருந்து சென்னை துறைமுகம் வரை கூவம் ஆற்றின் இடது கரையோரமாக இன்னொரு பறக்கும் விரைவு சாலை உருவாக்கப்படும்.
முதல்வரின் உத்தரவின்பேரில் இதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு தேவையான அரசு நிலத்தை வழங்கவும், கூவம் கரையை இத்திட்டத்துக்கு பயன்படுத்திக் கொள்ளவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் இத்திட்டத்துக்கு தேவைப்படும் தனியார் நிலங்களை கையகப்படுத்தவும், இதனால் பாதிக்கப்படும் குடும்பங்களை மறு குடியமர்வு செய்யவும் ரூ.345 கோடி ஒதுக்கப்படும். இந்த செலவை தமிழக அரசும், சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகமும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளும்.
இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications