கடைசி வழக்கிலும் சர்தாரி விடுதலை
இஸ்லாமாபாத்: ஆசிப் அலி சர்தாரி பிரதமர் பதவிக்கு வர தடையாக இருந்த கடைசி ஊழல் வழக்கிலும் அவர் விடுவிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் இருந்த அனைத்து ஊழல் வழக்குகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன.
பெனாசிர் பூட்டோவின் கணவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவருமான ஆசிப் அலி சர்தாரி மீது பல்வேறு ஊழல் வழக்குகள் இருந்தன.
சர்தாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஊழல் வழக்குகளை திரும்பப் பெற அதிபர் முஷாரப் உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த மாத தொடக்கத்தில் ராவல்பிண்டியில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வந்த 6 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.
7வது வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படும் என ராவல் பிண்டி நீதிமன்ற நீதிபதி சாகீர் குவாத்ரி அறிவித்திருந்தார். அதன்படி இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
2004ம் ஆண்டு, பிஎம்டபிள்யூ காரை இறக்குமதி செய்ததில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கு இது. இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குவாத்ரி, சர்தாரி மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதன் மூலம் அனைத்து வழக்குகளிலிருந்தும் சர்தாரி விடுவிக்கப்பட்டு விட்டார். இதன் மூலம் அவர் பிரதமர் பதவிக்கு வருவதற்கு இருந்த அனைத்துத் தடைகளும் நீங்கி விட்டன. இதையடுத்து சர்தாரி இடைத் தேர்தலில் போட்டியிட்டு பிரதமர் பதவிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications