ஐடிடிசியின் சென்னை-டார்ஜிலிங் 10 நாள் ரயில் டூர்
சென்னை: இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 10 நாள் சுற்றுலாவாக கொல்கத்தா, டார்ஜிலிங் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டூர் விவரம்:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை-அவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (2842) இந்த சுற்றுலா பயணம் தொடங்கும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 11.50 மணிக்கு அவுரா ரெயில் நிலையத்தை சென்றடையும். அன்று மாலை 5.35 மணிக்கு காமரூப் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்படுதல். திங்கட்கிழமை காலையில் நியூ ஜல்பாய்குரி (சிலிகுரி அருகே) ரெயில் நிலையத்துக்கு வந்து சேருதல்.
4 மணி நேர தனி வேன் பயணத்துக்கு பிறகு டார்ஜிலிங்கை மாலை சென்று அடைதல். அங்கு முக்கிய இடங்களை சுற்றி பார்த்து விட்டு இரவு அங்கு தங்குதல். டார்ஜிலிங்கில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு புறப் பட்டு சூரியோதயம் காண டைகர் ஹில்ஸ் சென்று சேருதல்.
பின்னர் பத்மஜா நாயுடு ஹிமாலயன் விலங்கியல் பூங்கா, ஹிமாலயன் மலையேறும் பயிற்சி நிலையம், ரோப்வே, டென்சிங் ஜாம்பு பாறை, கூர்க்கா கைவினை பொருள்கள் மையம் ஆகிய இடங்களை பார்வையிட்டு இரவில் தங்குதல்.
புதன்கிழமை காலை காங்டாக் புறப்படுதல், பிற்பகல் காங்டாக் சென்று பார்வையிடுதல் இரவில் தங்குதல். வியாழக்கிழமை காலையில் ட்சோமோகோ ஏரி, பாபா ஆலயம் உள்பட பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு இரவு தங்குதல்.
வெள்ளிக்கிழமை பொட்டானிக்கல் கார்டன், மலர் கண்காட்சி பார்த்து விட்டு நியூஜல்டிகுரி சென்று சேருதல். பின்னர் கொல்கத்தாவுக்கு மாலை 4.55 மணிக்கு சென்று சேருதல்.
சனிக்கிழமை அதி காலை 6.35 மணிக்கு அவுரா சென்று சேருதல், இதன்பின் கொல்கத்தாவில் இடங்களை சுற்றி பார்த்தல்.
அதன் பிறகு அவுரா ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்படுதல். இந்த ரெயில் ஞாயிற்றுக் கிழமை புறப்பட்டு அதிகாலை 3.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்து சேரும்.
10 பகல் 9 இரவு கொண்ட இந்த சுற்றுலா பயணத்துக்கு (பெரியவர், சிறியவர் உள்பட) அனைவருக்கும் கட்டணம் தலா ரூ.7000.
மேற்கண்ட தகவலை திட்ட மேலாளர் எம்.எஸ்.செங்குட்டுவன் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 28257214, 28278884 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications