மும்பை பங்குச் சந்தையில் இன்றும் பெரும் சரிவு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை பங்குச் சந்தைகளில் இன்றும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று 15,000யைத் தொட்டது. இது கடந்த வெள்ளிக்கிழமையை விட 700 புள்ளிகள் குறைவாகும்.
அதே போல தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் 200 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது.
கடந்த 2007 ஆகஸ்ட் மாதத்துக்குப் பின் மும்பை பங்குச் சந்தை 15,000 புள்ளிகள் என்ற அளவுக்கு சரிந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
இந்திய பங்குச் சந்தைகள் மட்டுமின்றி ஆசியா முழுவதுமே இன்று எல்லா சந்தைகளிலும் வீழ்ச்சி மிகக் கடுமையாக இருந்தது.
அமெரிக்காவில் பொருளாதாரத் தேக்கம் தொடங்கிவிட்டதன் எதிரொலியே இது என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications