ஓகனேக்கலில் போராட்டம்-எடியூரப்பாவுக்கு இல.கணேசன் கடும் கண்டனம்
சென்னை: தமிழகத்திற்குள் இருக்கும் ஓகனேக்கலில் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா நுழைந்தது அத்துமீறிய செயல், அராஜக செயல், கடும் கண்டனத்துக்குரிய செயல் என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கடுமையாக கண்டித்துள்ளார்.
ஓகனேக்கலை தங்களுக்குச் சொந்தமானது என்று சில கன்னட அமைப்புகள் சமீப காலமாக பேசி வருகின்றன. இது தொடர்பாக கர்நாடக எல்லை வரை வந்து அவ்வப்போது போராட்டமும் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இப்போது ஓட்டு வங்கி அரசியல் நுழைந்துள்ளது. அரசியல் கட்சிகள் தலையிட்டு குட்டையைக் குழப்ப ஆரம்பித்துள்ளன.
முதில் மதச்சார்பாற்ற ஜனதாளம் கட்சியினர் ஓகனேக்கல் வந்து போராட்டம் நடத்திச் சென்றனர். நேற்று பாஜகவினர் அம்மாநில முதல்வர் வேட்பாளரும், மூத்த தலைவருமான எடியூரப்பா தலைமையில் ஓகனேக்கல் வந்தனர். கர்நாடக எல்லையில் உள்ள மாறுகொட்டாய் அருகே போராட்டம் நடத்தினர்.
இந்த செயலுக்கு தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முதல்வர் பதவியை வகித்த ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
ஓகனேக்கல் தமிழகத்திற்குட்பட்ட பகுதி. தமிழகத்திற்குள் இருக்கும் ஒரு பகுதி. ஆனால் என்ன காரணத்தாலோ, பாஜகவினர் அறியாமையில் இருக்கின்றனர், அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர்.
எல்லைப் பிரச்சினையை எழுப்பினார் கர்நாடக தேர்தலில் ஜெயித்து விடலாம் என யாரோ சிலர் தவறான ஆலோசனையைச் சொல்லியிருக்க வேண்டும்.
தமிழக பாஜகவைப் பொறுத்தவரை எடியூரப்பா, ஓகனேக்கல் வந்து போராட்டம் நடத்தியது கடும் கண்டனத்துக்குரியது, தவறான செயல்.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களது லட்சியம். அதில் தமிழக அரசு எந்த நிலையிலும் மாறுபடக் கூடாது.
முல்லைப் பெரியாறு உள்ளிட்ட கேரளம் தொடர்பான பிரச்சினைகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைதியாக இருப்பது போல எங்களால் இருக்க முடியாது என்றார் இல.கணேசன்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள முதல்வரை, தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருபோதும் கடுமையாக விமர்சித்ததில்லை, கண்டித்ததில்லை. அதேபோல காங்கிரஸ் கட்சி கேரளாவில் ஆட்சியில் இருந்தபோதும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக கண்டித்தததில்லை.
அதேசமயம், கர்நாடக பாஜகவினரின் அத்துமீறல் செயலை, தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் பகிரங்கமாக, கடுமையாக கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்










Click it and Unblock the Notifications