வருகிறது புதிய வாக்காளர் அடையாள அட்டை
மதுரை: வங்கி ஏடிஎம் கார்டுகளின் அளவில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை உருவாக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இதைத் தெரிவித்தார்.
தொகுதிள் மறு சீரமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொகுதிகள் குறித்து 7 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நரேஷ் குப்தா ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஏடிஎம் கார்டு அளவில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை உருவாக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்தப் புதிய அடையாள அட்டையில், வாக்காளர்களின் பிறந்த தேதி இடம் பெற்றிருக்கும். இந்தப் புதிய வகை கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ. 15 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
திருத்தி அமைக்கப்பட்ட தொகுதிகளுக்கான வாக்காளர் பதிவு மையம், புதிய வாக்காளர் பட்டியல், வாக்குச் சாவடிகள் குறித்த பணிகள் ஜூன் 21ம் தேதிக்குள் முடிவடைந்து விடும்.
தமிழகத்தை ஐந்து மண்டலங்களாக பிரிக்கவுள்ளோம். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு பார்வையாளர் நியமிக்கப்படுவார். புதிய வாக்குச் சாவடிகள் நியமனம் மற்றும் பதட்டம் நிறைந்த வாக்குச் சாவடிகளை அடையாளம் காண்பது ஆகிய பணிகளில் இந்த பார்வையாளர்கள் ஈடுபடுவார்கள் என்றார் குப்தா.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications