ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு இலவச மதிய உணவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மதிய உணவு வழங்க தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. தாய்-சேய் நலனுக்காக சத்து மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

கர்ப்பிணிப் பெண்கள் சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்யும்போது பல மணி நேரம் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியுள்ளது.

இதனால் காலையில் சாப்பிட்டுவிட்டு வரும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு மதிய வேளையில் பசியுடன் திரும்ப வேண்டிய நிலையில் உள்ளனர்.

இந நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு இலவச மதிய உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல் கட்டமாக இந்த திட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதே போல குழந்தை பிறந்த பிறகு சுகாதார மையத்தில் தங்கியிருக்கும் பெண்களுக்கு, அவர்கள் வீடு திரும்பும் வரை உணவு வழங்கப்படும் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணிகளுக்கான உணவு சுகாதார நிலையங்களிலேயே தயாரிக்கப்படும். சமைக்க வசதியில்லாத நிலையங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உதவியைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+