விபத்தில் பலியான 8 பேருக்கு ரூ. 1 லட்சம்-கருணாநிதி உத்தரவு
சென்னை: சாலை விபத்தில் பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண உதவி அளிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு திருமணத்திற்குச் சென்று விட்டு திரும்பும் வழியில் உப்பூர் கிராமத்தில் அவர்கள் பயணம் செய்த வேன் லாரியுடன் மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் செந்தில்குமார், தனபாக்கியம், லெட்சுமி, வனரோஜா, நித்தியா, சரோஜா, தனலெட்சுமி, சந்தான லெட்சுமி ஆகிய 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் குறித்த செய்தி அறிந்ததும் முதல்வர் கருணாநிதி அதிர்ச்சியும் வேதனையும் அடைந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் சரோஜா தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளதால் உறுப்பினர் விபத்து நிவாரணத் திட்டத்தின் கீழ் அவரது குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாயும், உயிரிழந்த வர்களில் மற்ற 7 பேர் குடும்பங்களுக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாயும்,
காயமடைந்தவர்களுக்குத் தலா பத்தாயிரம் ரூபாய் வீதமும் மொத்தம் ரூ. 10.40 லட்சம் நிவாரண உதவியாக வழங்கிட ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications