''மாமா நான் திருடன் இல்லை''-போலீசுக்கு திருடன் கடிதம்
நாகை: நாகையில் ஒரே இரவில் 4 கடையில் திருடு போனது. திருடன் போலீஸாருக்கு சவால் விடுத்து கடிதம் எழுதி வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாகை ஆசாத் மார்க்கெட்டில் கடை வைத்திருப்பவர் சேகர். கடந்த 15ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டுச் சென்றார். நேற்று காலை வந்து கடையை திறந்தார். அப்போது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடு போயிருந்தது. ஓட்டை பிரித்து திருடன் கடைக்குள் புகுந்து தெரியவந்தது.
அதே பகுதியில் இருந்த எலக்ரானிக் கடை, மளிகை கடைகளிலும் திருட்டு நடந்திருந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் நாகை நகர காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் அந்த கடைகளுக்கு சென்று சோதனை செய்த போது கொள்ளையன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், ''மாமா நான் திருடன் இல்லை. முடிந்தால் பிடித்துக் கொள்ளவும்'' என்று எழுதியிருந்தது.
இதனைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications