ராஜ்யசபா தேர்தல்: அமைதி காத்தது ஏன்-விஜய்காந்த்

கட்சி தலைமையகத்தில் அவர் பேசுகையில், மதுராந்தகத்தில் உள்ள நிலம் நான் உழைத்து சம்பாதித்தது. அதில் புறம்போக்கு நிலம் இருப்பதாக இப்போது கூறுகின்றனர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நிலத்தை வாங்கியபோதே அதிகாரிகள் இதை கூறியிருக்க வேண்டும். புறம்போக்கு நிலம் இருக்கிறதென்றால், அதை எடுத்து கொள்ளுங்கள் என்று கூறுகிறேன். அந்த நிலத்தை வைத்து நான் சம்பாதிக்க நினைத்திருந்தால் காலியாக விட்டிருக்க மாட்டேன். அடுக்கு மாடி கட்டடங்களை கட்டி விற்பனை செய்திருப்பேன்.
அரசியல்வாதிகள் வளைத்து போட்டிருக்கும் புறம்போக்கு நிலம் எவ்வளவு இருக்கிறது என்பது எனக்கும், மக்களுக்கும் தெரியும். என்னை பயமுறுத்துவதாக நினைத்து முட்டி மோதி பார்க்கின்றனர். மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும் என்பதால், நான் என்றைக்கும் பின்வாங்க மாட்டேன்.
தமிழ், பண்பாடு, கலாசாரம் என்று கூறுபவர்கள் ஊழல் செய்து நாட்டை சுரண்டி சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். ராஜ்யசபா தேர்தலில் நான் யாருக்காவது ஆதரவு தெரிவித்திருந்தால் அவர்களது கூட்டணியில் சேர்ந்துவிட்டதாக கூறி அரசியல் செய்திருப்பார்கள். நான் யாருக்கும் விலை போக மாட்டேன்.
திருச்சியில் நடந்த கட்சியின் மகளிர் அணிப் பேரணியில், 4 கி.மீ. தூரம் கொள்கை உணர்ச்சியோடு பெண்கள் அணிவகுத்து வந்தனர். திமுகவினரால் அதுபோன்ற மகளிர் பேரணியை நடத்த முடியுமா என்று சவால் விடுகிறேன்.
செலக்டட் ஸ்டாப் சர்வீஸ் (எஸ்எஸ்எஸ்) என்ற பெயரில் அரசு பஸ் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தியுள்ளது. அரசிடம் கேட்டால் நாங்கள், புதிது புதிதாக பஸ் விடுகிறோம் என்று கூறுகின்றனர் என்றார் விஜய்காந்த்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications