ரூ.1.5 கோடிக்கு மேல் வரி-3வது இடத்தில் தமிழகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த நிதியாண்டில் ரூ.1.5 கோடிக்கு மேல் முன்கூட்டியே வருமான வரி செலுத்தியோர் எண்ணிக்கையில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.

2007-08ம் நிதியாண்டுக்கான வருமான வரி செலுத்தியோர் விவரம் தெரிய வரத் தொடங்கியுள்ளது.

இதில் ரூ.1.5 கோடிக்கு மேல் முன்கூட்டியே வருமான வரி செலுத்தியோர் 134 பேர். இதில், 54 பேருடன் மகாராஷ்டிரம் முதலிடத்திலும், டெல்லி 2வது இடத்திலும், 15 பேருடன் தமிழகம் 3வது இடத்திலும் உள்ளன.

அவர்களில் டாப் 20ல் முதல் 7 இடங்களில் பிரபலங்கள் யாரும் இல்லை. 8வது இடத்தில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானும், 19வது இடத்தில் உ.பி. முதல்வர் மாயாவதியும் உள்ளனர்.

2, 3, 5, 6வது இடங்களில் மும்பையைச் சேர்ந்த ஒரேக் குடும்பத்தினர். மொத்தமாக அவர்கள் ரூ.179 கோடி வரி செலுத்தியுள்ளனர். ரூ.58 கோடி செலுத்தி முதலிடத்தில் இருப்பவர் யார் என்பது தெரியவில்லை.

டாப் 100 பட்டியலில் மேக்ஸ் இந்தியாவின் அனல்ஜித் சிங், விப்ரோ நிறுவன அதிபர் ஆசிம் பிரேம்ஜி, பிர்லா குழுமத்தின் குமார்மங்கலம் பிர்லா, வோடபோன் நிறுவனத்தின் அசிம்கோஷ், இன்போசிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நந்தன் நீல்கனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

முன்னணி தொழிலதிபர்களான ரிலையன்ஸ் சகோதரர்கள் முகேஷ், அனில் அம்பானி இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+