ஓதுவார் ஆறுமுகசாமிக்கு மாதம் ரூ. 3,000 நிதியுதவி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவற்றைப் பாட போட்டு வந்த தடையை எதிர்த்து நீண்ட காலமாக போராடி வருபவர் ஆறுமுகசாமி ஓதுவார்.
இவரது தொடர் போராட்டங்களால் சமீபத்தில் விடிவு பிறந்தது. தேவாரம் உள்ளிட்ட திருமறைகளைப் பாடலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு முதல் நாளில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர் தீட்சிதர்கள். ஆனால் போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுத்ததாலும், அரசு கடுமையாக எச்சரித்ததாலும், தீட்சிதர்கள் பணிந்தனர்.
இதையடுத்து ஆறுமுகசாமி, நடராஜர் கோவிலில் பக்திப் பரவசத்துடன் தேவாரம் பாடல்களைப் பாடினார். தீட்சிதர்கள் அளித்த மரியாதையையும் நிராகரித்தார்.
இந்த நிலையில் ஆறுமுகசாமிக்கு முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்து, மாதந்தோறும் ரூ. 3,000 நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிதம்பரம் கோவிலில் தேவார பாடல்களைப் பாடுவதற்கு நீண்ட காலமாக முயற்சி மேற்கொண்டு வந்தவர் ஆறுமுகசாமி ஓதுவார்.
அவர் தேவார, திருவாசகப் பாடல்களை இசையோடு பாடுவதில் வல்லவராகவும், தமிழறிஞர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.
முதுமையிலும் உணர்வு குன்றாது, தமிழ் மொழி பண்பாட்டு மரபுகளை பாதுகாப்பதிலும், பேணி வளர்ப்பதிலும், கொண்டுள்ள மன உறுதியைப் போற்றிப் பாராட்டும் வகையில், அவருக்கு தமிழறிஞர் நிதியுதவித் திட்டத்தின் கீழ் இந்த மாதம் 1ம் தேதி முதல் அவரது வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் நிதியுதவியும், பதினைந்து ரூபாய் மருத்துவப் படியும் வழங்கிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications