மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி மாணவன் கைது
Subscribe to Oneindia Tamil
திருப்போரூர்: ஏழாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பத்தாம் வகுப்பு மாணவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள ஆமூரை சேர்ந்த ஏழுமலையின் மகன் பிரசாத் (14). மானாம்மதி மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே ஊரைச் சேர்ந்த நதியா (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆமூர் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
நதியாவை பிரசாத் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் நதியா கர்ப்பமடைந்தார்.
இதையறிந்த நதியாவின் பெற்றோர்கள் பிரசாத் மீது மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தனர்.
இதன்பேரில் பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். பிரசாத்துக்கு 18 வயது நிரம்பவில்லை என்பதால் அவரை சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொண்டு சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications