'சாராயத்துக்கு துணை'-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
நாகை: சாராய வியாபாரிக்கு சாதகமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம், வேளாங்கன்னியை சேர்ந்த சாராய வியாபாரி கொழுப்பு குமார். கள்ளச் சாராயம் விற்றபோது அவரை கீழையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொழுப்பு குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தேவையான ஆவணங்களை தயார் செய்யவும், ஜாமீனில் பெறுவதற்குள் செய்ய இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோத்னீஸ் உத்தரவிட்டார்.
ஆனால் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆவணங்களை வேண்டுமென்றே குறித்த காலத்திற்குள் சமர்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
குமாரிடம் பெரும் தொகையை இன்ஸ்பெக்டர் மாமூல் வாங்கியிருந்ததால் நடவடிக்கையை தாமதப்படுத்தி வந்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை எஸ்.பி. அஸ்வின் கோத்னீஸ் சஸ்பெண்ட் செய்து உத்திரவிட்டார்.












Click it and Unblock the Notifications