சவுதியில் 11க்கும் 10க்கும் 'டும் டும்'
Subscribe to Oneindia Tamil
ரியாத்: சவுதி அரேபியாவில் 11 வயது பள்ளிச் சிறுவனுக்கும் அவனது 10 வயது முறைப் பெண்ணுக்கும் திருமணம் நடந்ததுள்ளது.
முராய்ஷக்-அல்-ரஷிதி என்பவரின் மகன் முகம்மது-அல்-ரஷிதி (11). பள்ளிக்குச் செல்லும் முகமது அல் ரஷிதிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் இந்த தந்தை.
முகமது அல் ரஷிதியின் முறைப் பெண்தான் மணப்பெண். 10 வயதே ஆன அந்த சிறுமியின் பெயர் வெளியிடப்படவில்லை.
விந்தையான இந்த 'குட்டீஸ்' திருமணம் பற்றி உள்ளூர் பத்திரிகையான கலீஜ் டைம்ஸில் செய்தி வெளியாகியுள்ளது.
இந் நிலையில் முகமது அல் ரஷிதின் பள்ளி தலைமையாசிரியர், இந்த திருமணம் சரியான முறை அல்ல என்றாலும், மணமக்கள் நீடுழி இணைந்து வாழ வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications