உடலில் தீயுடன் ஓடிய நடிகை மரணம்
சென்னை: சென்னையில் உடலில் பற்றி எரியும் தீயுடன் ஓடிய நடன நடிகை சிகிச்ைச பலனளிக்காமல் இன்று மரணமடைந்தார்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் திரைப்படங்களில் குழு நடனத்தில் இடம் பெற்று ஆடி வரும் நடன நடிகை ஆவார். 2 நாட்களுக்கு முன்பு 10 மணியளவில் ஷூட்டிங் போய் விட்டு வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நள்ளிரவில் உடலில் பற்றி எரியும் தீயுடன் சங்கீதா வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். நடு ரோட்டில் அவர் தீயுடன் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அலறியபடி அங்குமிங்கும் ஓடிய சங்கீதாவின் மீது அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் பாதி உடல் கருகிய நிலையில் சங்கீதா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த சங்கீதாவிடம் வாக்குமூலம் பெற்றனர்.
அப்போது, வறுமை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார் சங்கீதா. தனது சொந்த ஊர் சேலம் எனவும் அவர் தெரிவித்தார். அதன் பின்னர் அவர் சுய நினைவை இழந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications