காவிரி-வைகை, தாமிரபரணி-நம்பியாறு நதிகளை இணைக்க திட்டம்

இது தொடர்பாக தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக நதிகளை இணைக்கும் திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படும். முதல் கட்டமாக தென் மாவட்டங்களில் ஓடும் தாமிரபரணி ஆறு- கருமேனியாறு- நம்பியாறு ஆகிய நதிகள் ரூ. 369 கோடி செலவில் இணைக்கப்படும்.
இதன்மூலம் தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியும்.
அதே போல காவிரி ஆற்றின் உபரி நீரை பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல காவிரி - அக்கினியாறு- கோரையாறு- பாம்பாறு- வைகை நதி- குண்டாறு ஆகியவை இணைக்கப்படும். இதன் முதல்கட்டமாக காவிரியாற்றின் குறுக்கே கட்டளை பகுதியில் தடுப்பணை கட்டப்படும்.
சான்று கேட்பின், சரித்திர காலந்தொட்டு தமிழ்மண்ணை செழிக்கச் செய்திட நட்புறவு கொண்டிருந்த கர்நாடகத்தின் காவிரிப் பிணக்கு - பாலாறு - முல்லைப் பெரியாறு என இணக்கம் ஏற்படாத இடையூறுகள்! உரிமையுள்ள குடிதண்ணீரைக்கூட கொடுக்க முடியாதென குறுக்கே நிற்கும் கொடுமை!.
ஒரே இந்தியா-ஒரே நாடு-ஒரேதேசம்-இமயம் முதல் குமரி வரை இந்நாட்டு மக்கள் - இந்திய மக்கள் என்பதெல்லாம் ஏட்டில் எழுத்தாக மட்டுமே ஒளிவிடுகின்றனவே அல்லாமல்; ஒற்றுமை - ஒருமைப்பாடு - இறையாண்மை இவையனைத்தும் கேள்விக்குறிகளாகி; நமது தமிழகத்தின் தேவைகளும் கோரிக்கைகளும் கேலிப்பொருள்களாகி விடுகின்றன.
இந் நிலையில், முக்கி முனகி, மூச்சிறைக்க - முட்டுக்கட்டைகளைக் கடந்து, திட்டங்களைத் தீட்டி மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக நிலையாக முன்னேறுவதற்குத் துணை நிற்க முன்வராமல்; மத்திய அரசும் பாராமுகமாக இல்லாமல் நமது உரிமைக்குப் பாதுகாப்பாக இருந்திட வேண்டும் என்கிற நமது வேண்டுகோளை ஒருபுறம் வலியுறுத்தியவாறு; மறுபுறம் வளம் பெருக்கித் தமிழகம் வாழும் வலிமை பெற அனைவரும் அணிவகுத்து நிற்போம் என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications