தமிழகத்தில் மழை, வெள்ளத்துக்கு 12 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ளத்துக்கு இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர். நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
அரபிக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தினால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கோடை மழை தீவிரமடைந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையினால் தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்தது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகள் நிரம்பின.
இந்த நிலையில் புதிய புயல் சின்னம் காரணமாக பெய்த மழையினால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா 2 பேரும், திருச்சி, நெல்லை, விழுப்புரம், தூத்துக்குடி மாவட்டங்களில் தலா ஒருவரும் மழை வெள்ளத்துக்குப் பலியாகியுள்ளனர். மொத்தம் 12 பேர் இறந்தனர்.
இதில் 9 பேர் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து பலியாயினர்.
மேலும் 50க்கும் அதிகமான கால்நடைகளும் பலியாகியுள்ளன.
இந் நிலையில், மழை நிவாரண நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டு்ள்ளார்.
பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 1லட்சம்:
மழை, வெள்ளத்திற்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என கருணாநிதி அறிவித்துள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications