புதுவை காங். தலைவர் சண்முகம் திடீர் மாற்றம்
டெல்லி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த ப.சண்முகம் திடீரென மாற்றப்பட்டுள்ளார். புதிய தலைவராக முன்னாள் அமைச்சர் ஏ.வி.சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக கடந்த 25 ஆண்டு காலம் பதவி வகித்து வந்தவர் சண்முகம். இந்த நிலையில் அவரை மாற்றிய காங்கிரஸ் மேலிடம், புதிய தலைவராக ஏ.வி.சுப்ரமணியனை நியமித்துள்ளது.
காரைக்கால் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். அமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் வரலாறு காணாத வகையில் கோஷ்டிப் பூசல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவரை கட்சி மேலிடம் மாற்றியுள்ளது. சண்முகத்தால் கோஷ்டிப் பூசலை சுத்தமாக தடுக்க முடியாத நிலையில் (அவரே ஒரு கோஷ்டிக்குத் தலைவர்), ஏ.வி.சுப்ரமணியன் எந்த அளவுக்கு இதில் சாதிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.
சுப்ரமணியத்தின் நியமனத்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கூடுதல் பலன் கிடைத்துள்ளது. காரைக்காலை காங்கிரஸ் அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அங்கு ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் தலைவராக நியமித்துள்ளதால் காரைக்கால் பிராந்திய மக்களைக் கவர முடியும் என காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications