மத்திய அரசு ஊழியர் ஊதியம் 40% உயர்கிறது
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு பரிந்துரைகள் அடங்கிய 6வது சம்பள கமிஷன் அறிக்கை இன்று நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் சமர்பிக்கப்பட்டது.
கமிஷனுக்கு தலைமை தாங்கிய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா இந்த அறிக்கையை சிதம்பரத்திடம் ஒப்படைத்தார்.
இனி இந்த அறிக்கையை மத்திய அரசு ஆராயும். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குடனும் சிதம்பரம் ஆலோசனை நடத்துவார்.
இந்த அறிக்கையில் எந்த அளவுக்கு ஊதிய உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறித்துப் பேச ஸ்ரீகிருஷ்ணா மறுத்துவிட்டார்.
ஆனாலும், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை 40 சதவீதம் வரை உயர்த்த இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 20,000 முதல் ரூ. 25 கோடி வரை கூடுதல் செலவாகும்.
இதன்மூலம் சுமார் 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்கள்.
இந்த கமிஷன் 2006ம் ஆண்டு அக்டோபரில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஊதிய உயர்வு தவிர, மத்திய அரசு ஊழியர்களின் கேடர்களை குறைக்கவும், பதவி உயர்வு உள்ளிட்ட விதிகளை எளிமையாக்கவும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications